நாங்க ரொம்ப விளையாடுவோம் ஆனா அத எல்லாரும் சேட்டை பண்றோம்னு சொல்ல்வங்க அதே சமயம் நாங்க எங்க திறமைய காட்டுவோம் …..இதற்கு ஒரு உதாரணம் எங்க பள்ளியில் நடந்த bliss festival தான் ……அதுல நாங்க எல்லா போட்டிலயும் எங்க திறமைய காட்டுனோம் …..வெற்றியாளர்களாக ஜோளித்தோம் !!!! அதுல நடந்த group singing ல கூட சொந்தமா பாட்டு கூட எழுதி பாடுனோம் …………..இதோ அந்த பாடல் !!!
பூக்கள் மண்ணில் வாழும் காலம் கொஞ்சம் எனினும்
வாசம் மிஞ்சும் அது போல நாமும் வாழ்வில் இருபோமே !
(2)
வரும் காலம் நம் கைகளில்
இந்நாளும் நம் தோள்களில்
எந்நாளும் நம்முடையதே !!
நம்பிக்கை பிறக்கட்டும்
வாழ்வில் ஒளி வீசட்டும்
முன்னேறி வா நண்பனே !!
நம்பிக்கையுடன் போர் தொடுப்போம்
தடைகளை தகர்த்து எறிவோம்
எதிரிகளை தோற்கடிப்போம்
வா தோழா !!!
humming tone
பூக்கள் மண்ணில் வாழும் ……….
(1)
hiphop
சிங்கம் என புறபடு
சரித்திரம் படைத்திடு
தடைகளை உடைத்திடு வா தோழா
வானம் என்பது தூரம் இல்லை
தோல்வி என்பது நமக்கு இல்லை
சாதனை படைத்திட வாடா !!
ரெக்கை கட்டி விண்ணில பறப்போம்
விண்ணில் சென்று மண்ணை ரசிப்போம்
நட்பை என்றும் உயிராய் காப்போம்
வா தோழா !!!!
என்னதா பாட்டு பாட்னாலும்
எவளவு engish பேசுனாலும்
நாங்க தமிழன் டா !!!!!
பூக்கள் மண்ணில் வாழும் ………
(1)
நேற்று என்பது வரலராச்சு
நாளை என்பதும் கனவும் ஆச்சு
இன்று என்பது வந்தாச்சு
விழித்திரு தோழா !!!!!!!!!
உணர்வில்லாத உயிரும் இல்லை
உயிரில்லாத உடலும் இல்லை
முனைதால் தேசம் நம் காலடியில்
உணர்த்திடு தோழா !!!!!!!
பூக்கள் மண்ணில் வாழும் காலம் கொஞ்சம் எனினும்
வாசம் மிஞ்சும் அது போல நாமும் வாழ்வில் இருபோமே !!!!!!!!!
(3)
this song is sung by deepak pradeep , saravanan , varatha rajan , vignesh !!!
இந்த பாடலுக்கு எங்களுக்கு முதல் பரிசு அடித்தது !!!!!!!!!! இதே போல் எங்க திறமையை புரிஞ்சிக்காம இருந்தவங்களுக்கு நாங்க திரமசாளிங்கனு காட்டுனோம் …. இதே மாதிரி எங்க பசங்க நிறைய பரிசு அடிச்சு கலக்குனோம் !!!